கோவை மாநகரில் மொத்தம் 4 வட்டார போக்குவரத்து அலுவலங்கள் உள்ளன. இவற்றில் 2020ல் பதிவான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 194. அதையடுத்து 2021ல் அதிரடியாக 1,133 ஆக உயர்ந்தது. 2022ல் தொடர்ந்து 3,945 ஆக அதிகரித்தது சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட 2 மடங்காக 7,033 ஆக இருந்தது. 

இந்நிலையில் 2024ல் டிசம்பர் 24ம் தேதி வரை இந்த 4 வட்டார போக்குவரத்து அலுவலங்களில் பதிவான மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 6,849 ஆக உள்ளது. கோவை மாநகரில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், வாகனங்களுக்கு ரீசார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டால் அது மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கும், பயன்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கு ஊக்கமாக அமையும் என பார்க்கப்படுகிறது.