கோவை உள்பட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்க துறை சோதனை
- by David
- Apr 07,2025
Coimbatore
சென்னை மண்டல அமலாக்க துறை அதிகாரிகள் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் நடத்தும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அவரின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கோவை திருச்சி சாலையில் உள்ள TVH அலுவலகத்திலும், கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சரின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம் குறித்து தெரியவரும்.