அமலாக்கத்துறை சோதனை இன்னும் பல்வேறு அரசு ஊழல்களை அம்பலப்படுத்தும் - கோவையில் எஸ்.ஆர்.சேகர் பேட்டி
- by David
- Mar 15,2025
Coimbatore
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுபற்றி கோவை காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
டாஸ்மாக் ஊழல் பாட்டில், டிரான்ஸ்போர்ட், தயாரிப்பு ஆலை என மூன்று வகையாக உள்ளது என கூறிய அவர் இந்த ஊழலில் அரசியல் வாதிகள் சம்பந்தம் உள்ளது என குறிப்பிட்டார். திமுக தற்போது வசமாக சிக்கி கொண்டுள்ளதாகவும் விமர்சித்தார். அமலாக்கத்துறை சோதனை இன்னும் பல்வேறு அரசு ஊழல்களை அம்பலப்படுத்தும் என நம்புவதாக தெரிவித்தார்.