இது மழைக்காலம் தானே? மழை கொஞ்சம் கோவை பக்கம் எட்டிப்பார்க்குமா? என கோவை மக்கள் எதிர்பார்த்து வரும் சூழலில், வானிலை அப்டேட் ஒன்றை கோவை வெதர் மேன் சந்தோஷ் வழங்கியுள்ளார்.

அதில் அவர் கொங்கு பகுதியின் மேற்கு மண்டலமான கிருஷ்ணகிரி, தர்மபுரி, கிழக்கு பகுதியான சேலம், நம்மக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். மேற்கு பகுதிகளான நீலகிரி மற்றும் கோவை, தென் பகுதிகளான திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் வறட்சி தான் நிலவும் என தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் (ஏப்ரல் 28) மழைபொழிவு துவங்கும் ஆனால் அதுவரை வறண்ட வானிலையே துவங்கும். அக்டோபர் மாதத்தில் நல்ல அளவில் கனமழை துவங்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.