அக்டோபர் 1ஆம் தேதி மாலை கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்ல 100 அடி சாலை வழியாக 3 இளைஞர்கள் காரில் வந்துள்ளனர். அந்த வழியே வழக்கமான ஹெல்மெட், வாகன லைசென்ஸ் சரிபார்த்தல் போன்ற சோதனையில் காவலர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அவர்கள் இந்த இளைஞர்கள் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்களில் ஒருவர் மது குடித்திருந்துள்ளார். மது அருந்தி கார் ஓட்டினார்களா என விசாரிக்க போலீசார் முயன்றுள்ளனர். அப்போது இளைஞர்கள் தரப்பினரிலிருந்து 2 பேர் அடக்கமாக பேச, அதில் கிரண் எனும் இளைஞர் மட்டும் தான் பெரிய இடத்து பிள்ளை என்ற தோணியில் போலீசாரிடம் பேசியுள்ளார். இந்த வீடியோ செவ்வாய் மாலை முதலே வைரல் ஆனது.
இவருக்கும் காவலர்களுக்கும் இடையே வாய்ப்பேச்சு பெரிதாகி செல்ல, தான் 'திமுக கட்சி பொது செயலாளர் கனிமொழியின் தனிப்பட்ட உதவியாளரின் (PA) தம்பி என கூறி, அவர் மொபைல் அழைப்பில் உள்ளார் எனவும் அவரிடம் பேசுங்கள் என காவல் துறையினரிடம் கெத்து காட்டியுள்ளார்.
யாராக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான் என காவல் துறையினர் அவர் கூறியதை கண்டுகொள்ளாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர் . விசாரித்ததில் இந்த கிரண் என்பவற்றின் அண்ணன் கனிமொழியின் PA வே இல்லையாம். இவர் OK OK பட பாணியில் வேறு யாரையோ உயர் அதிகாரி பேச சொல்லி, போனை போலீசாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் அது வெடிக்காத புஸ்வானமாக மாறிவிட்டது.
இதற்கிடையே இப்போது இவர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில் தான் யாரென்றே கனிமொழி PA வுக்கு தெரியாது எனவும், வேறு ஒரு நபரை வைத்து தான் அப்படி பேச வைக்க முயன்றேன் எனவும் கூறி, பொது இடத்தில் இப்படி நடந்துகொண்டதற்கும் கனிமொழி பெயரை தவறாக பயன்படுத்தியத்துக்கும், காவல் துறையினரிடம் தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோவையில் OK OK பட பாணியில் டிராபிக் போலீசிடம் தப்பிக்க முயன்ற இளைஞர் இன்று மீண்டும் வைரல் ஆனார்!
- by David
- Oct 03,2024