கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்கும் பில்லூர் I மற்றும் II குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரித்து கொண்டுவரும் பிரதான குழாய்களில் கட்டன் மலை என்ற இடத்தில் பராமரிப்பு பணிகள் 24.02.2025 முதல் 25.02.2025 ஆகிய இரண்டு நாட்கள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் பில்லூர் பில்லூர் 1, மற்றும் பில்லூர் 2 குடிநீர் திட்டத்தில் குடிநீர் சேகரிப்பு இருக்காது என்பதால், இத்திட்டங்களின் மூலம் குடிநீர் விநியோகம் பெறும் பகுதிகளான சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கணபதி மாநகர், காந்திமா நகர், சங்கனூர் ரோடு கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், காந்திபுரம், வ உ சி பூங்கா, சித்தாபுதூர், ராமநாதபுரம், டவுன்ஹால், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகமாகும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மற்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.