14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையில் ரூ.200 ஐ குறைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

இதனால் தற்போது ரூ.1118க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை ரூ.900  ஆக விற்கப்படும்.

நுகர்வோர்களுக்கு இவ்வாறு குறைந்த விலையில் விற்பனை செய்யப்போகும் நிறுவனங்களான பாரத் கேஸ், ஹெச்.பி, இன்டேன் போன்றவைக்கு அரசு மானியம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு ரூ.200 குறைக்கப்பட்டுள்ளதால் பொது அறிவிப்போடு சேர்த்து அவர்களுக்கு மொத்தம் ரூ.400 குறைக்கப்படுகிறது.

வரவுள்ள தேர்தலை மனதில் வைத்து இந்த விலைகுறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறது.