கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச தரம் கொண்ட கிரிக்கெட் மைதானத்தை அமைக்க அரசு முதல்கட்ட முயற்சிகளை எடுத்துள்ளது.

இன்று (4.12.24) சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கோவையில் அமையவுள்ள இந்த மைதானம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. 

மைதானம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால்  துவங்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு இறுதி செய்வது மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது ஆகிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை ஆரம்பிப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் விவாதித்துள்ளனர்.