தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில் இன்று கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கோவை மேற்கு மண்டல போலீசார் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வில் கோவை மாநகரம்-மாவட்டம், திருப்பூர் மாநகரம்-மாவட்டம், மற்றும் நீலகிரி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரிடமிருந்து பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை காவல் துறை தலைவர் பெற்றுக்கொண்டார். மொத்தம் 711 மனுக்கள் பெறப்பட்டுள்ளன இந்நிகழ்வில் பெறப்பட்டுள்ளன.
ஏற்கனவே இடம் மாறுதல் உள்ளிட்ட மனுக்கள் கொடுத்தவர்களின் பெயர்கள் முன்னுரிமை அடிப்படையிலும், இப்போது மனுக்கள் கொடுக்கும் போலீசாரின் மனுக்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும் பரிசீலிக்கப்படும் என அவர் கூறினார். பொங்கல் பண்டிகைக்கு முன் இந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் சரவணக்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொங்கலுக்கு முன்பே நிச்சயம் நடவடிக்கை ... 4 மாவட்ட காவல்துறையினருக்கு கோவையில் நல்ல செய்தி சொன்ன தமிழக காவல் துறை தலைவர்
- by David
- Aug 31,2024