கோவை மாநகரில் நேற்று மாலை 7 மணி முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. 

 

இதில் நகரிலேயே அதிகபட்சமாக கோவை விமான நிலையப்பகுதியில் 87.6 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக கவுண்டம்பாளையத்தில் 12.8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகின.

 

சிட்ரா - 77 மிமீ, சரவணம்பட்டி - 74.2 மிமீ, சாய்பாபா காலனி - 50.8 மிமீ, வேளாண் பல்கலை - 47 மிமீ, ஆர்.எஸ்.புரம் - 45.2 மிமீ, வடவள்ளி, ஒண்டிபுதூர் - 35.4 மிமீ, ரேஸ்கோர்ஸ் - 29 மிமீ, பீளமேடு - 26.6 மிமீ, காந்திபுரம் - 22.8 மிமீ, கணபதி - 17.6 மிமீ, போத்தனூர் - 14.4 மிமீ. (இவை இன்று காலை வரை பதிவான மழை அளவு)

 

நேற்று போல இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கோவை வெதர் மேன் கூறியுள்ளார்.