கோவையில் கடந்த 1980 ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989 ஆம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றிய இரா.மோகன் இன்று உயிரிழந்தார்.
அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை வந்தார். அஞ்சலி செலுத்திய பின் அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
"இளம் வயது முதல் மிசா உள்ளிட்ட அடக்குமுறைகளை எதிர்கொண்டு கழகத்தின் முன்னணி செயல்வீரராகத் திகழ்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்பையும், கழகத்தலைவர் அவர்களின் நம்பிக்கையையும் பெற்ற அண்ணன் மோகன் அவர்களின் மறைவு கழகத்திற்கு பேரிழப்பு," என துணை முதலமைச்சர் உதயநிதி கருத்து தெரிவித்தார்.
"அண்ணண் மோகன் அவர்களின் கழகப்பணி - மக்கள் பணி என்றென்றும் நிலைத்திருக்கும்," எனவும் அவர் X தளத்தில் பதிவிட்டார்.
கலைஞரின் அன்பை பெற்றவர் மறைந்த கோவை முன்னாள் எம்.பி மோகன்! - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- by CC Web Desk
- Dec 10,2024