இன்று கோவைக்கு வருகை தந்த தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள ஜிசிடி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

 

அங்கிருந்து தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 29 திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையங்கள் திறந்து வைத்தார். இந்த மையங்கள் அனைத்தும் உலக தரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு 2900 கம்ப்யூட்டர்களும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. 

 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த சில வாரங்கள் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக பணி வாய்ப்பு பெற்றுள்ள 3700 பேரில் 30 மாணவர்களுக்கு கோவையில் பணி நியமன அணைகளும் துணை முதலமைச்சர் வழங்கினார். 

 

நான் முதல்வன் வேலைவாய்ப்பு முகாம் மூலம் ரூ. 3 லட்சம் முதல் 42 லட்சம் ஆண்டு ஊதியம் வழங்கும் பணி நியமன ஆணையை இளைஞர்கள் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.