கோவை சூலூர் பகுதியில் ரூ.260 கோடி மதிப்பீட்டில் ராணுவ தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோவை மாவட்டத்தில் சூலூர் தாலுகாவில் உள்ள வரப்பட்டி கிராமத்தில் சுமார் 370.59 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (SIPCOT) சார்பில் பாதுகாப்பு துறைக்கான பிரேத்தியேக தொழில்பூங்காவை அமைப்பதற்கு சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்த ஒப்புதலை பெற மாநில சுற்றுசூழல் தாக்கம் மதிப்பீட்டு ஆணையத்தினிடம் SIPCOT தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

SIPCOT மேலாண்மை இயக்குனர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பத்திற்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது.

இந்த அனுமதி கிடைத்து உள்ளதால் இந்த பூங்கா கட்டமைக்ககும் பணிகள் துவங்கும் எனவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த பூங்கா அமைவதால் கோவை மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புது வாய்ப்புகள் உருவாக்ககும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.