கோவையில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வழங்க கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
முதலமைச்சர் சுதந்திர தின விழா உரையில் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 'முதல்வர் மருந்தகங்கள்' தொடங்கப்படும் என அறிவித்தார்.
'முதல்வர் மருந்தகம்' அமைக்க விருப்பமுள்ள B.Pharm; D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க www. mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலம்.
'முதல்வர் மருந்தகம்' அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 20.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என 07.11.2024 தேதி அறிவித்திருந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் .இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு : கோவையில் 'முதல்வர் மருந்தகம்' அமைக்க விருப்பமுள்ளவர்கள் இம்மாதம் இறுதிவரை விண்ணப்பிக்கலாம்!
- by CC Web Desk
- Nov 22,2024