கோவை மருதமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாளை (26.12.24) 'நாள் முழுவதும் அன்னதான வழங்கும் திட்டம்' துவக்க உள்ளது. காலை 10.00 மணி அளவில் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்வை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவிலின் அறங்காவலர் குழு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மருதமலை முருகர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான வழங்கும் திட்டம் நாளை துவங்குகிறது!
- by CC Web Desk
- Dec 25,2024