மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு
கருத்துவேறுபாடு காரணமாக 2018ல் தனது கணவர் ராஜா (45) என்பவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்த கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த அனுஷா (32), தனக்கு தனது கணவர் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார் என ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயை தாக்கிய மகன் சிறையில் அடைப்பு
தனது 57 வயது தாய் வசந்தியிடம் மது குடிக்க பணம் கேட்ட வேலாண்டிபாளையத்தை சேர்ந்த உதயகுமார் (26), தாய் பணம் தராததால் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். வசந்தியை அருகில் வசிப்பவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வசந்தி போலீசாரிடம் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
2ம் முறையாக ஒரே வீட்டில் திருட முயன்ற வாலிபர்கள் கைது
உப்பிலிப்பாளையம் பகுதியில் 73 வயது முதியவர் ராமசாமி வீட்டின் ஒரு அறையில் இருந்த பழைய மோட்டார் மற்றும் பைப்புகளை கடந்த 4 நாட்களுக்கு முன் 2 பேர் திருட முயற்சி செய்த போது சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வந்ததால் திட்டத்தை கைவிட்டு சென்று நேற்று மீண்டும் முயன்றுள்ளனர். அப்போது மீண்டும் அருகில் இருந்தவர்கள் வந்து அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் மசக்காளிபாளையம் ராமசாமி வீதியை சேர்ந்த ஏசு என்கிற சபரி (19) மற்றும் சிங்காநல்லூர் முதல் மேற்கு வீதியை சேர்ந்த கவுதம் (19)ஆகியோர் என்பது தெரிந்தது. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இளம்பெண் குறித்து இன்ஸ்டாகிராம் அவதூறு பரப்பிய நபர் கைது
மேட்டுப்பாளையம் கணுவாய்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விமல்குமார் (22) என்பவருடன் பழகி வந்த 18 வயது இளம்பெண் அவரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடன் பழகுவதை தவிர்ந்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விமல்குமார் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 முதல் 15 கணக்குகளை துவக்கி மாணவி பற்றி தவறாக பதிவேற்றம் செய்து அவதூறு பரப்பி வந்துள்ளார். இதை கண்ட மாணவி இதுகுறித்த சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து விமல்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து போலீசார் அவர் தொடங்கிய இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் அழித்தனர்.
பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருட்டு
கோவை மரக்கடை சந்திரன் முதல் வீதியை சேர்ந்தவர் ஆய்ஷம்மாள் (75). இவர் மதுக்கரையில் இருந்து பஸ்சில் டவுன் ஹால் வந்தார். டவுன் ஹால் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்ஷம்மாள் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்றவரை தேடி வருகின்றனர்.
கணவன் மனைவி தகராறு.. தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட பெண்
வேலைக்கு செல்லாமல் வீட்டில் மது குடித்த வந்த தனது கணவன் சண்முககுமார் மீதும் வருத்தத்தில் இருந்த கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த சரோஜா (43) அவருடன் சண்டைபோட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மன வேதனை அடைந்த சரோஜா, வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரைம் செய்திகள் - 06.02.2025
- by CC Web Desk
- Feb 06,2025