கோவையில் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ள பேன்சி வகை பட்டாசுகளை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர். தீபாவளிக்கு இன்னும் 24 மணி நேரத்துக்கும் குறைவான காலமே உள்ளதால் கோவை மாநகரில் 400க்கும் அதிகமான பட்டாசு கடைகளில் விற்பனை நேற்று சிறப்பாக இருந்துள்ளது. இது இன்றும் நல்ல அளவில் இருக்கும் என எதிர்பார்ப்பில் வியாபாரிகள் உள்ளனர்.

கலர் புகைபட்கள் வெளியிடும் பட்டாசுகள், நின்று நின்று ஒளியை வெளியிடும் செலஃபீ ஸ்டிக் பட்டாசு, போட்டோ ஃபிளாஷ், ராக்கெட் போல தாழ்ந்த படி குறைந்த அளவிற்கு பறக்கும் ட்ரான் வகை பேன்சி பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இது சிறுவர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. 

தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல்  - 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credits : fireworks2home.com