கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத வழித்தடங்களை கண்டறிந்து அங்கு மினி பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 29 வழித்தடங்களில் மினி பஸ் சேவைகள் விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த 29 வழித்தடங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் ஓரின நாட்களில் அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும்.
இந்த வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வட்டாரப் போக்குவரத்து துறை பெற உள்ளது.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை இந்த மாத இறுதிக்குள் ஆராய்ந்து, தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மார்ச் மாதம் 4ம் தேதிக்குள் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத 65 % இடங்கள் பயன்பெறவுள்ளது. வருமே மே மாதம் 1ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் இந்த வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிய வருகிறது.