கோவை மருதம் கோ - ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு 30% தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் துவங்கி வைத்தார்.

கோவை வ.உ.சி பூங்கா அருகில் உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

தீபாவளி 2024"சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்கள் அனைத்து விற்பனை நிலையங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.

தீபாவளி 2024"சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு, பருத்தி சேலைகள்,போர்வைகள், படுக்கு விரிப்புகள்,வேட்டிகள், தலையணை உறைகள்,லுங்கிகள், துண்டு ரகங்கள்ஆடவர் அணியும் ஆயுத்த சட்டைகள்,மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள், ஆர்கானிக் பருத்தி சேலைகள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் ரகங்கள் ஏராளமான விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகிறது.காஞ்சிபுரம், சேலம்,கோவை,ஆரணி,தஞ்சை போன்ற பகுதியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வாங்கும் அணைந்து காஞ்சிபுரம் பட்டுபுடவையிலும் ஜரி அரசு குறிப்பிட்டுள்ள தரத்தில் உள்ளதை உறுதிப்படுத்திட சோதனை செய்யப்பட்ட பின்னர் அதில் ஜரி கார்டு (Zari Authenticity Card) இடம்பெற்றிருக்கும். மேலும் இந்த புடவைகளை உருவாக்கியது யார் என்ற தகவலும் நெசவாளர் அட்டையில் (Weaver Card)  இடம்பெறும். நெசவாளர்களை கவுரவப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.