கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று வரை (ஜூன் 22) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.

கோவையை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை (21.6.24) முதல் தென் மேற்கு பருவமழை காலம் என்பது ஆரம்பமாகும். முதலில் குளிர்ச்சியான கற்று கோவையில் வீசும். ஞாயிறு (23.6.24) முதல் ஈரப்பதம் கலந்த காற்று பாலக்காடு, நீலகிரி, வால்பாறை மற்றும் சிறுவாணி மலைப்பகுதிகளில் குளு குளு காற்று வீசும். 24 ஆம் தேதி முதல் இந்த பருவ காற்று மற்றும் மழைக்காலம் வேகமெடுக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் கூறுகின்றன.