10.1 கிலோமீட்டர் தொலைவுக்கு உப்பிலிபாளையம் சாலை சிக்னல் துவக்கத்தில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை கட்டப்பட்டு வரும் அவிநாசி சாலை மேம்பாலத்தின் பிரதான சாலை பகுதிகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்க மாநில நெடுஞ்சாலை துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு திட்டமிட்டுள்ளது.
(படங்கள் : உப்பிலிபாளையம் முதல் அண்ணா சிலை வரை)
அதே போல இந்த முழு மேம்பால திட்டத்தையும் முடிக்க 2025 மாட்ச் மாதம் வரை ஆகும் என நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேம்பாலத்தின் பிரதான சாலை பகுதி 2 வழித்தடங்களில் மட்டும் கட்டப்பட வேண்டும். உப்பிலிபாளையம் சாலை சிக்னல் துவங்கி லட்சுமி மில்ஸ் சிக்னல் வரை மேம்பாலத்தின் மேற்பரப்பு அமைக்கப்பட்டு விட்டது.
(படங்கள் : ஜி.டி. மியூசியம் முதல் லட்சுமி மில்ஸ் வரை)
லட்சுமி மில்ஸ் சிக்னல் துவங்கி பீளமேடு ராதாகிருஷ்ணா மில் அருகே உள்ள HP பெட்ரோல் பங்க் அருகே வரை மேற்பரப்பு அமைக்கப்படவேண்டும். அங்கிருந்து ஹோப்ஸ் வரை மேற்பரப்பு அமைக்கப்பட்டு விட்டது.
(படங்கள் : அவிநாசி சாலை முதல் பீளமேடு வரை)
ஹோப்ஸ் பகுதியில் ரயில்வே பாலம் இருப்பதால் அங்கு தூண் அமைத்து பாலம் கட்டுவதற்கு பதிலாக இணைப்பு பாலம் (Composite Girder) அமைக்கப்படவுள்ளது. இதற்கான சோதனைகள் நடைபெற்றுள்ளது. இந்த வாரத்தில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் இடையே கையெழுத்தாக வாய்ப்புள்ளது. இதற்கடுத்து கோல்ட்வின்ஸ வரை மேற்பரப்பு தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு உள்ளது.
(படங்கள் : வரதராஜபுரம் முதல் விமான நிலையம் சிக்னல் வரை)
அண்ணா சிலை இறங்கு தளம் நவ இந்தியா இறங்கு தளம் சீராக அமைக்கப்பட்டுள்ளது. நவ இந்தியா-பீளமேடு PSG பொறியியல் கல்லூரி அருகே அமைந்து வரும் ஏறு தளத்திற்காக 5 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளது.
5 தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஹோப்ஸ் காலேஜ் ஏறு தளம் வேகமாக கட்டப்பட்டு வருகிறது.PSG கலை கல்லூரி, CIT கல்லூரி வழியே வரும் ஏறு, இறங்கு தளங்கள் சீராக கட்டப்பட்டு வருகின்றன. இதில் CIT கல்லூரி வழியே அமைந்து வரும் ஏறு தளம், ஹோப்ஸ் காலேஜ் ஏறு தளம் ஆகிய இரண்டு இடங்களில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
உப்பிலிபாளையத்தில் துவங்கும் மேம்பாலத்தின் ஆரம்ப பகுதியில் தார் சாலை போடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது. சில இடங்களில் மேம்பாலத்தின் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. பல இடங்களில் கட்டவேண்டி உள்ளது. தூண்கள் அனைத்து இடங்களிலும் எழுப்பப்பட்டு விட்டது. மேற்பரப்பும், ராம்ப் (ஏறு தளம், இறங்கு தளம்) அமைக்கும் பணிகள் உள்ளன.
(படம்: கோல்ட்வினஸ்)
2020 டிசம்பர் மாதம் துவங்கிய இந்த கட்டுமான பணிகள் ஆகஸ்ட் 2024ல் முடிக்கப்படவேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் நிறைவடைய கால தாமதம் ஆகிவருகிறது. 2025 மார்ச் மாதத்தில் முக்கியமான அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது சுமார் 75% பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவருகிறது.
Photos : David Karunakaran