காந்திபுரம் பேருந்து நிலையப் பகுதியில் லிப்ட் வசதியுடன் நடை மேம்பாலம் கட்ட பூர்வாங்க பணிகள் மாநகராட்சியால் கடந்த ஜூலை மாதம் துவங்கப்பட்டது. இந்த பணியை அரசு விரைவாக துவங்க வேண்டும் என அந்த வழியே சாலையை கடக்கும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்தும், அதற்கு எதிரே உள்ள பகுதியில் கிராஸ் கட் சாலை வழியாக பேருந்து ஏற ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் அந்த வழியே வருகின்றனர். 

இவர்கள் சாலையை நிமிடத்துக்கு ஒரு முறை ஒரு புறத்தில் இருந்து மற்றொருபுறம் கடக்கின்றனர். நகரிலேயே பரபரப்பான சாலையாக இந்த சாலை இருப்பதால், இங்கு வாகனங்கள் அதிக அளவில் இயங்கிவருகிறது. இந்த சாலை வழியே சில இடங்களில் யூ - டர்ன் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், VKK மேனன் ரோடு மற்றும் பாரதியார் ரோடு ஆகிய முக்கிய சாலைகள் வழியே வரும் வாகன ஓட்டிகள் சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் வரை சென்று யூ டர்ன் செய்து தான் கிராஸ் கட் ரோடுக்குள்ளும், கணபதி நோக்கியும் செல்ல முடியும். யூ டர்ன் செய்து வரும் வாகனங்கள் கிராஸ் கட் & கணபதி நோக்கி வரும் போது காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தின் 2 புறமும் மக்கள் சலைய கடக்கின்றனர். ஏற்கனவே யூ டர்ன் செய்து வரும் வாகனங்கள் இதனால் நிற்க வேண்டியுள்ளது. அதையடுத்து டிராபிக் சிக்னல் வேறு அங்கு உள்ளதால் வாகனங்கள் கூடுதலாக நிற்க வேண்டும்.பொது மக்களும் அடிக்கடி கூட்டமாக சாலையை கடக்கும் போது சவால்களை எதிற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அந்த லிஃப்ட் வசதியுடன் கூடிய நடை மேம்பாலத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் இருவரின் வாழ்த்தை கோவை மாநகராட்சி பெற முடியும்.