கோவை மாவட்டத்தில் மினி பஸ் இயக்கப்படவுள்ள வழித்தடங்களை ஆய்வு செய்த கலெக்டர்!
- by David
- Mar 11,2025
Coimbatore
கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத வழித்தடங்களை கண்டறிந்து அங்கு மினி பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் 29 வழித்தடங்களில் மினி பஸ் சேவைகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத 65% இடங்கள் பயன்பெறவுள்ளது. வரும் மே மாதம் 1ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் இந்த வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிய வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று மாவட்டத்தில் இயக்கப்படவுள்ள மினி பஸ் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு செய்தார். எந்தெந்த வழித்தடங்களில் மினி பஸ் சேவைகள் துவங்கும் என்பது பற்றி விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளிவரும்.