குண்டும் குழியுமாக உள்ள கோவை டைடல் பார்க் சாலை விரைவில் சீரமைக்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

இந்த சாலையை ரூ. 1.5 கோடி மதிப்பில் சீரமைக்க கோவை மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

 

783.60 மீட்டர் நீளமும், 21.65 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சாலை சீரமைக்கப்படுவதுடன் சாலையில் மழைநீர் வடிகால், பெஞ்சுகள், சாலை அருகே தோட்டங்கள், தெருவிளக்குகள் எல்லாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதன் பின்னணி என்ன? 

 

கடந்த மாதம் தொழில் துறை அமைச்சர் TRB ராஜா டைடல் பார்க் வந்தபோது இந்த சாலை மோசமாக இருப்பதை கண்டு இதை சீரமைக்க கோவை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்திருந்தார். அதன் தாக்கமே இந்த நடவடிக்கை என பார்க்கப்படுகிறது. 

 

கோவை டைடல் பார்கில் உள்ள 70 நிறுவனங்களில் சுமார் 1000 பேர் பணிபுரிகின்றனர். தினமும் காலை மதியம் மாலை இரவு என பல சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிக்கு சாலை மார்க்கமாக வருவார்கள். 

 

இந்த பகுதியில் வேலை புரிபவர்களும் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்துகையில் சிரமத்திற்குள்ளகின்றனர். ஆனால் தற்போது இந்த சாலை மேம்பட போகின்றது என்பது பலருக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.

 

இந்த சாலை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களின் நிதி பங்களிப்புடன் விரைவில் நடைபெற உள்ளது.