துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இரயில்வே பாதையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப்பணிகள் 23.12.2024 தேதி முதல் நடைபெற உள்ளதால் துடியலூர் NGGO காலனியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் வாகனங்கள் மற்றும் கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி செல்லும் வாகனப்போக்குவரத்தில் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்படுகிறது.
இலகுரக வாகனங்கள்:
துடியலூர் NGGO காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம். வெள்ளக்கிணர் வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு. NGGO காலனி கணபதி நகர் சென்று வலதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் வழியாக கோவில்பாளையம் செல்லலாம்.
கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லும் வழித்தடம் தடைசெய்யப்பட்டுள்ளது. மாற்றாக, வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையம் வழியாக கணபதி நகரில் இடது புறம் திரும்பி வெள்ளக்கிணர் ஹவுசிங் போர்டு, வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம்.
கணரக வாகனங்கள்:
துடியலூர் NGGO காலனி வழியாக கோவில்பாளையம் செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, வாகனங்கள் துடியலூர் பஸ் நிறுத்தம். வெள்ளக்கிணர். சரவணம்பட்டி ரோடு சுண்ணாம்புக்காலவாயில் இடதுபுறம் திரும்பி அத்திப்பாளையம் சென்று கோவில்பாளையம் செல்லலாம்.
கோவில்பாளையத்திலிருந்து துடியலூர் NGGO காலனி வழியாக மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்லும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக வாகனங்கள் கோவில்பாளையம், அத்திப்பாளையத்தில் இடது புறம் திரும்பி கண்ணாம்புக்காலவாய் வழியாக சரவணம்பட்டி சாலையில் வலது புறம் திரும்பி வெள்ளக்கிணர் வழியாக துடியலூர் செல்லலாம்.
தகவல் : கோவை மாநகர காவல் துறை