இனி சுடாது, சுட்டெரிக்கும்! ... வெயில் காலம் கொங்கு மண்டலத்தில் அதிரடியாக ஆரம்பம்
- by David
- Mar 04,2025
கோடைகாலத்தின் ஆரம்ப கட்ட நாட்களே அதிரடியாக இருந்த நிலையில், இனி கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அடுத்த 50 நாட்கள் அக்னி நட்சத்திரம் அளவுக்கு வெயில் சுட்டெரிக்கும் எனவும் கோவை மாநகரிலும் வெயில் சுட்டெரிக்கத் துவங்கும் எனவும் கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்துள்ளார்.
அவருடைய வானிலை அறிக்கை படி, மார்ச் 10ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களுக்கும் மழை வாய்ப்பு இல்லை. அதற்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உள்ளது. இது பற்றி வரும் நாட்களில் உறுதிப்படுத்தப்படும் என கூறியுள்ளார். மே மாதத்தில் நல்ல மழை எதிர்பார்க்கலாம் என கூறிய அவர் மே மாதத்தில் கொங்கு மண்டலம் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலன மழை காரணமாக குளிர்ச்சி அடையும் என கருத்து தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் குடையையும், கூடுதலாக தண்ணீர் பாட்டிலையும் பக்கத்திலே வைத்துக்கொள்ளுங்கள் மக்களே. மதியம் 12-3 மணி வரை வெயிலில் செல்லவேண்டிய சூழல் இருந்தால் தண்ணீர் பாட்டில் இல்லாமல் செல்லாதீர்கள்.