2025 ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் தொடர்ச்சியாக கோவை மாநகராட்சி ஆணையர், மேயர் ஆய்வு செய்து வருகின்றனர்.  

காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப்பகுதியில் முதற்கட்டமாக ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் சுமார் 45.00 ஏக்கர பரப்பளவில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப்பூங்காவில் மொத்தம் பணிகள் 70%க்கும் அதிகமாக நிறைவேறி உள்ளது. பல்வேறு வகை செடிகள் நடப்பட்டு அவை வளர துவங்கி உள்ளன.

பெரும் எதிர்பார்ப்பு உள்ள இந்த திட்டத்தில் தமிழ்த்தாய்க்கு பெருமை சேர்க்கும் விதத்தில் புது அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2010ல் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டு விழாவினை  நினைவில் கொள்ளும் வகையிலும், தமிழன்னைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாகவும் கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.