கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட (கரும்புக்கடை) சாரமேடு சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளால் 15 அடி சாலையாக கடந்த 50 கால ஆண்டுகளாக இருந்து வந்தது.

இதனால் பொது மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் பாதிக்கப்பட்டு வந்தது. இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற தொடர்ந்து மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்த வந்தனர். இந்நிலையில், இப்பகுதியை அண்மையில் பார்வையிட்ட ஆணையாளர் உடனடியாக ஆக்கிரமிப்பை மூன்று கட்டமாக அகற்ற உத்திரவிட்டார்.

அதன்படி இன்று 25.09.2024 நகரமைப்பு அலுவலர்கள் மற்றும் காவல் துறை பந்தோபஸ்துடன் முதற்கட்ட ஆக்கிரமிப்புகளான சாலையின் இருபுறமும் 660 அடி நீளத்திலுள்ள 27 ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியில் தற்போது சாலையின் அகலம் 45லிருந்தது 50 அடி அகலமாக உள்ளது. 
இந்த நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இரண்டாம் கட்ட ஆக்கிரிமிப்பு அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்திரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.