கோவையை சேர்ந்த மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை காவல் துறையினர் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த சர்ச்சைக்குள்ளான நிறுவனத்தால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு புகார் தெரிவிக்கையில் பணம் முதலீடு செய்ததற்கான ஆவணங்களை, குறிப்பாக வங்கி ஸ்டேட்மென்ட் போன்ற ஆவனத்தை மனுவுடன் இணைக்க காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இந்த சர்ச்சைக்குள்ளான மைவி3 ஆட்ஸ் நிறுவனம் இதுவரை ரூ.2,190 கோடியை மக்களிடம் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.