தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், இதில் சிலருக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் கோவை மாநகரில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரும் அடங்கியுள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன், சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக ஐ.ஜி-ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புதிய கோவை மாநகர காவல்துறை ஆணையாளராக சரவண சுந்தர் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாநகரில் தெற்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த சரவணக்குமார் சென்னை தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவநாதன் கோவை மாநகர காவல் துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார்.
சசி மோகன் கோவை சரக டிஐஜி யாக நியமிக்கப்பட்டுள்ளார்.