பணத்தின் மீது உள்ள பேராசையில் எத்தனையோ படித்த இளைஞர்கள் தவறான முறையில் அதை அடைய முயலுவதை நாம் பல தருணங்களில் செய்தியாக பார்த்து வருகிறோம்.

இன்று பணத்துக்குக்காக உலகில் என்னென்னவோ நடக்கிறது. இப்படி பட்ட தருணத்தில் நம்மை சுற்றி நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர் என்பதை உணர்த்தும்படி சில சம்பவங்கள் அரங்கேறும். அப்படி ஒரு சம்பவம் அண்மையில் கோவையில் நடைபெற்றுள்ளது.

கோவை மாநகர் ஆவரம்பாளையம் சாலை வழியே அமைந்துள்ள டாக்டர் பாலசுந்தரம் சாலையில் ஒருத்தர் ரூ.50,000 பணத்தை கடந்த வெள்ளி இரவு அன்று தவறவிட்டுள்ளார். இந்த பணம் அடங்கிய பண்டில் கேட்பாரின்றி கிடந்து உள்ளது. இந்நிலையில் அந்த வழியே வந்த நிர்மலா (41) எனும் பெண் இந்த பண்டிலை பார்த்து உள்ளார். அதில் ரூ.50,000 இருப்பதை பார்த்ததும் அருகில் உள்ள C-2 பந்தய சாலை காவல் நிலையத்தில் மறுநாள் காலை ஒப்படைத்துள்ளார்.

நேர்மையாக செலயல்பட்ட அவரை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS இன்று நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் ஒன்றை வழங்கினார்.

பணம் யாருடையது?

அங்குள்ள CCTV கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து உள்ளனர். அதில் ஒரு நபர் அந்த சாலையில் எதையோ தேடுவது பதிவாகியுள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, தான் வங்கியில் இருந்து எடுத்து வந்த 7.5 லட்சம் ரூபாயில் 1 பண்டில் காணாமல் போனது எனக்கூறியுள்ளார். உரிய தகவல் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க போலீசார் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.