கொங்கு பகுதிக்கான கத்திரி வெயில் காலம் துவங்கியுள்ளதாக கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோடையின் உச்சம் என்பது கொங்கு பகுதிகளை பொறுத்தவரை ஏப்ரல் மாதத்தில் தான் இருக்கும் என்று கூறிய அவர், மே மாதத்தில் தான் நிலைமை தனியத்துவங்கும் என்றார்.
கொங்கு பகுதியின் பல இடங்களில் வெப்பம் எனது 37 முதல் 42 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கோவையில் 38 முதல் 39 வரை இருக்கும் எனவும் அவர் கூறினார்.
அதே சமயம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் என கூறியுள்ளார். எனவே அடுத்த 20 நாட்கள் மிகவும் முக்கியமானவை. பாதுகாப்பாக, உடலில் நீர் அளவை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்த 20 நாட்களுக்கு ரெடி ஆகிக்கோங்க கோவை மக்களே!
- by David
- Apr 02,2024