கோவை மாநகரில் உள்ள ஜி.பி. சிக்னல் தாண்டி செல்லும் வழியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சியின் ஆம்னி பேருந்து நிறுத்தத்தின் தரம் உயர்த்தல் பணிகள் நிறைவடைய தாமதமாகி கொண்டுள்ள நிலையில், இதை வேகமாக முடிக்க வேண்டும் என கோவை மாநகராட்சி தரப்பில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பேருந்து நிலையத்திற்குள் சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் தேவைப்படும் இடங்களில் தளங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு தகவல் படி, 90% பணிகள் இந்த திட்டத்தில் நிறைவு பெற்றுள்ளது. தளமிடும் பணி மட்டுமே மீதம் உள்ளது. அதுவும் 1 வார காலத்திற்குள் முடித்து வைக்கப்படும். இந்த வளாகம் 1 மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரியவருகிறது.