இந்த வாரமே திறக்கப்படுகிறது கோவை ஆம்னி பஸ் ஸ்டான்ட்!
- by CC Web Desk
- Feb 18,2025
கோவை மாநகரில் உள்ள ஜி.பி. சிக்னல் தாண்டி செல்லும் வழியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சியின் ஆம்னி பேருந்து நிறுத்தத்தின் தரம் உயர்த்தல் பணிகள் 98% நிறைவேறிவிட்டதாகவும் வெறும் 2% பணிகள் மட்டுமே உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
சாலைகள் அமைக்கும் பணிகள் மற்றும் தேவைப்படும் இடங்களில் தளங்கள் அமைக்கும் பணிகள் இன்று மாலைக்குள் முடிவடைந்து, இந்த வளாகம் வரும் வியாழன் (20.2.25) அன்று திறக்கப்படும் எனவும், திறப்பு விழாவில் தமிழக நகராட்சி நிர்வாக அமைச்சர் K.N. நேரு பங்கேற்று திறந்து வைப்பார் எனவும் கூறப்படுகிறது.
சுமார். ரூ.3.50 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 40 முதல் 50 பேருந்துகள் நிறுத்த முடியும். பேருந்து ஓட்டுனர்கள், பயணிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தேவையான வசதிகள் இந்த வளாகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. இந்த வளாகம் தரமுயர்த்தப்பட்டதால் பயணிகளுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது என்பதை இது பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களில் தெரிந்துகொள்ளலாம்.