கோவையில் இன்று நடைபெற்ற  அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம்  கோவை மாவட்டத்தின் தேவைகளான பல்வேறு கோரிக்கைகளை மனுவாக வழங்கினார் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

மெட்ரோ ரயில் திட்டம் தாமதமாவது ஏன் என வானதி சுட்டிக்காட்டினார். கோவையின் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2 முக்கிய அறிக்கைகளை தமிழக அரசு வழங்க வேண்டியது உள்ளது. மாநில அரசு இன்னும் ஒருங்கிணைந்த இயக்கத் திட்ட அறிக்கை - Comprehensive Mobility Plan மற்றும் மாற்று ஆய்வுத் திட்ட அறிக்கை - Alternative Analysis Report எனும் 2  முக்கிய அறிக்கைகளை மத்திய அரசுக்கு கொடுக்காமல் இருப்பதால் மெட்ரோ திட்டம் காலதாமதம் ஆவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனவே கோவையில் மெட்ரோ ரயில் திட்டதிற்கான முழுமையான தகவல்களை மாநில அரசு மத்திய அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.