சென்ற மாதம் இறுதியில் மதுரை மற்றும் கோவை ஆகிய இரு மாநகரங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை CMRL - சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. 

இந்நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. 

அதாவது தமிழக அரசு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தன்னிடம் சமர்ப்பித்த இந்த 2 திட்ட அறிக்கைகளைமத்திய அரசிடம் வழங்கியுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை மத்திய அரசு விரைவில் வழங்கவுள்ளதாகவும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் மெட்ரோ பற்றி பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கடிதம் மூலம்  அமைச்சர் பதிலளித்துள்ளார் எனவும் அதில் அவர், டிசம்பர் 5ம் தேதியன்று மதுரை, கோவை ஆகிய  மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசின் கைகளுக்கு கிடைத்ததாகவும், இதை ஆய்வு செய்து, சரிபார்த்தபின்னர் அதற்கான நிதி வருகிற 2025 பாராளுமன்ற பட்ஜெட்டில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார் என தகவல் உள்ளது.