டெல்லியில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) சார்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பங்குபெற்ற 68வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் கோவை K Sirs பள்ளியில் பயிலும் மாணவி.எம்.மோனிஸ்ரீ 17 வயதிற்குட்பட்ட தனிநபர் கராத்தே போட்டியில் (குமித்தே) 48 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இன்று அவர் கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மனைவியிடம் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கும், நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மேயர் பாராட்டினார். இந்த சந்திப்பின் போது மாணவியின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர் கலந்துகொண்டனர்.