கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் கூடுதல் வசதிகள் !
- by CC Web Desk
- Apr 03,2025
Coimbatore
கோவை திருச்சி ரோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் தனியார் அமைப்பால் அமைக்கப்பட்ட 24 மணி நேர குடிநீர் வழங்கும் மையம் மற்றும் தாய்மார்கள் பாலூட்டும் அறை ஆகியவற்றை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் திறந்து வைத்தார்.
நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த 2 கட்டமைப்புகளை கோவை டவுன் ஹாலில் செயல்படும் சுமங்கலி ஜுவல்லர்ஸ் எனும் நிறுவனம் அதன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, ஹெல்பிங் ஹர்ட்ஸ் எனும் தன்னார்வ அமைப்பு மூலம் நிறுவியது. இவற்றை கலெக்டர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா முன்னிலையில் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.