கோவை கணுவாய் அருகே காட்டு யானைகள் சாலையை கடந்து செல்ல முயன்றதை, பார்த்தவாறே எவ்வித பதற்றமும் இல்லாமல் முதியவர் ஒருவர் ஹாயாக மொப்பட்டில் சென்ற வீடியோ வைரல்.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், மாங்கரை,  ஆனைக்கட்டி, கணுவாய், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மலை மற்றும் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் உலா வருகின்றன.

இந்நிலையில் கணுவாயை அடுத்த நர்சரி பகுதியில் இரண்டு காட்டுயானைகள் சாலையை கடந்து மலைக்குள் சென்றுள்ளன. அந்நேரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர் யானையை பார்த்தவாறே ஹாயாக கடந்து சென்றுள்ளார்.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.