முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனருமான 'பேரறிஞர்' அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி,  கோவை திமுக சார்பில் இன்று நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அமைதி பேரணி நடைபெற்றது. 

இந்த பேரணி சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் வரை நடைபெற்றது. காந்திபுரம் பகுதியில் உள்ள அண்ணாவின் சிலை முன்பு பேரணி நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து அவரின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு திமுகவினர் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான திமுகவை  சார்ந்தோர் கலந்து கொண்டு அண்ணாவின் புகைப்படத்தை ஏந்தியபடி சென்றது பலரின் கவனத்தை பெற்றது.