தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இன்று 38 இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக அறிவித்திருக்கிறார். 

 

அதன்படி கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த கிராந்தி குமார் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

 

கிராந்தி குமார் கோவை மாவட்டத்தின் 183 ஆவது கலெக்டராக 2023 பிப்ரவரியில் பொறுப்பேற்றவர். இரண்டு ஆண்டுகளாக கோவை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த அவருக்கு பதிலாக இதற்கு முன்பு பொது துறையில் அரசு இணை செயலராக இருந்த பவன்குமார் கோவை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்க உள்ளார்.