வரும் ஜூன் 19 ஆம் தேதி கோவை மாவட்டம், மதுக்கரை தாலுகாவில் உள்ள மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு நிவர்த்தி செய்ய, கோவை மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) கிராந்தி குமார் அங்கு நேரில் அதிகாரிகளுடன் செல்கிறார்.

முதல் கட்டமாக 19 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை வெவ்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெறுவார்கள்.  இதே போல மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியர் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெறவுள்ளார்.

இதனால் மதுக்கரை தாலுகாவில் உள்ள 20 கிராமங்கள் பயனடைய உள்ளது. உங்களை தேடி உங்கள் ஊரில் எனும் அரசு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தாலுகாவில் ஆட்சியர் தங்கி மக்களின் குறைகளை கேட்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மதுக்கரையில் 19.6.2024 காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஆட்சியர் அங்கு தங்கவுள்ளார்.