போலீசுடன் வாக்குவாதம் செய்த பேருந்து டிரைவர்

கோவை, சித்ரா பகுதியில் பீளமேடு போலீஸ் ஏட்டு சென்ரயன் போக்குவரத்து ஒழுங்கு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக தனியார் பஸ் வந்தது. அந்த பஸ்ஸை ஓட்டி வந்த டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

இதைப் பார்த்த போலீஸ்காரர் சென்ராயன் அவரிடம் செல்போன் ஒட்டியபடி செல்லலாமா என்று கேட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து சென்ராயன் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனியார் பஸ் ஓட்டி வந்தது திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த காளிதாஸ் என தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகமடி போலீஸ் சிறப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

14 வயது சிறுமியுடன் பழகிய 29 வயது நபரை தாக்கிய தந்தை

கோவை, ரத்தினபுரி கண்ணப்பா நகர் பகுதி அருகே உள்ள நகரில் வசிப்பவர் தாயுமானவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மர வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார்.

இந்த நிலையில் பாலுசாமி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் தாயுமானவர் மகளுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவரை பலமுறை கண்டித்து உள்ளார். இந்த நிலையில் மணிகண்டன் அவரிடம் உனது மகளைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார்.  

நேற்று மணிகண்டன் வீட்டு அருகில் நின்ற போது தாயுமானவர் அங்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும் போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தில் தாயுமானவர்  அவர் வைத்திருந்த மர வேலைக்கு பயன்படும் உளியால் சரமாரியாக குத்தினார். இதில் வயிறு உள்பட 2 இடங்களில் மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.