இந்தியாவின் மிக பெரிய ராட்டினத்தை கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்காவில் நிறுவ கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இந்தியாவின் மிக பெரிய ராட்டினம் டெல்லியில் உள்ளது. அதே போல மும்பையில் ஒரு பிரம்மாண்ட ராட்டினத்தை அமைக்க மும்பை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. 

மேலும் செம்மொழி பூங்காவில் ஜிப் லைன் பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இதை அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் நிகழ்த்த திட்டம் உள்ளது.

செம்மொழி பூங்காவில் 75% பணிகள் நிறைவடைந்து உள்ளது. மீதம் உள்ள பணிகளை மே மாதத்திற்குள் முடித்து ஜூன் மாதத்தில் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் நடைபெறும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையரும், மேயரும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.