கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளதால், காய்ச்சல் (டெங்கு காய்ச்சல் உட்பட) பரவுதவற்கு சாதகமான காலநிலை நிலவுகிறது. எனவே கடந்த 14ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
14 முதல் 16 ஆம் தேதி ஆகிய இந்த 3 நாட்களில் மாநகரில் மொத்தம் 160 முகாம்கள் நடைபெற்று, அதில் 9545 பேரை பரிசோதித்ததில் 206 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே பருவமழைக்காலம் முடியும் வரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ள கோவை மாநகராட்சி தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு IAS பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது என்னவென்றால் :-
காய்ச்சல் ஏற்பட்டால் மருந்தகங்களில் மருந்துக்கள் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து, உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/ மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும். தினசரி குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், பொது மக்கள் வசிக்கும் வீடுகளிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் மழை நீர் வடிகால் முறையாக பராமரிப்பு செய்திடல் வேண்டும். பருவமழைக்காலத்தில் காய்ச்சல் முகாமில் கலந்துகொண்டு காய்சசல் பரவாமல் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பள்ளி மாணவ /மாணவியர்களுக்கு பருவமழை காலம் குறித்தும், காய்ச்சல் பரவுதலை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அவர்தம் வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுக்கள் பரவாமல் தடுப்புப்பணிகளை கையாள்வது குறித்தும், மாணவ/ மாணவியர்களில் காய்ச்சல் ஏற்படும்போது அது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு மண்டல சுகாதார அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்களிடம் உடனடியாக தெரிவிக்கவேண்டும். பொது மக்கள் காய்ச்சல் தடுப்புபணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
கோவை மாநகரில் 3 நாளில் 206 பேருக்கு காய்ச்சல்! பருவமழையால் காய்ச்சல் பரவ வாய்ப்பு... காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டம்!
- by David
- Oct 16,2024