ஆடிஸ் வீதி பகுதியில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியால் ரூ. 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு மக்கள் மத்தியில், குறிப்பாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களிடம் கிடைத்த வரவேற்ப்பை தொடர்ந்து கோவை மாநகரில் அதேபோல மற்றுமொரு மையம் அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் பல வசதிகள் கொண்ட நூலகம் மற்றும் அறிவு சார் மையமாக  கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த நூலகம் வார்டு என் 86ல் அமையும் எனவும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.