கோவையில் நேற்று  மாநில அளவிலான அனைத்து பிரிவினருக்கான கராத்தே போட்டி (Open State Championship) நடைபெற்றது.

கரும்புக்கடை பகுதியில் உள்ள க்ரெசென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநில அளவிலான போட்டியில்,  கணபதி ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கட்டா எனும் கராத்தே பிரிவில் முதல் பரிசினை இந்த பள்ளியை சேர்ந்த 10 மாணவ- மாணவியர்களும், இரண்டாம் பரிசினை 6 மாணவ- மாணவவியர்களும்‌ மூன்றாம் பரிசினை 4 மாணவ -மாணவியர்களும் பெற்றனர். 

இத்துடன் ஃபைட்டிங் பிரிவில் முதல் பரிசினை 9 மாணவ- மாணவியர்களும், இரண்டாம் பரிசினை 2 மாணவ, மாணவியர்களும் மற்றும் மூன்றாம் பரிசினை 2  மாணவ- மாணவியர்களும் வென்று மாநகராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை ஆசிரியர் G.K.ஆனந்குமார், விளையாட்டு ஆசிரியர் முத்தையா மற்றும் கராத்தே பயிற்சியாளர் ரவிக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.