உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 

ஒவ்வொரு தனி மனிதனும், தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும், மற்ற மனிதரை வாழவிடும் நெறிமுறையை உணர்த்துவதற்காகவும், மனிதநேயத்தால் ஒன்றிணையவும், மனித உரிமைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தையும், மனிதநேயத்தையும் மீண்டும் உறுதிப்படுத்தவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறாமல் தடுக்கவும்,  இந்நாளில் உறுதிமொழி ஏற்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இன்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.