துடியலூர் பகுதியில் பேருந்தில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால்,சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவை துடியலூர் பேருந்து நிலையத்தை ரூ.1 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் கொண்டாதாக தரமுயர்த்த கோவை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி  உள்ளது.

கடந்த சில காலமாகவே இந்த பேருந்து நிலையத்தை புதுப்பிக்கவேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதியில் பேருந்து சேவைகளை பயன்படுத்தும் மக்களிடையே இருந்துவருகிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கி உள்ளதாக தெரியவருகிறது.

பயணிகள் பேருந்து நிலையத்தில் அமர்வதற்கான வசதி, நீண்ட நிழற்குடை, பேருந்துகள் வரும் நேரம் மற்றும் சேவை குறித்த தகவல்களை காட்டும் டிஜிட்டல் போர்டு உள்ளிட்ட சில வசதிகள் இந்த தரமுயர்த்தல் திட்டத்தில் வழங்கிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பேருந்து நிலையம் போல துடியலூர் பேருந்து நிலையத்தை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.இதற்கான திட்டம் வரும் நாட்களில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.