கிராஃபிக் டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு 
கோவை மாநகராட்சியின் சார்பில் இலவசமாக 30 நாட்கள் விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சி வருகின்ற 20.03.2025 அன்று முதல் நடைபெற உள்ளது.

இந்த துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்கள் வழிநடத்தும் இந்த பயிற்சியில், Adobe Photoshop, Illustrator, Premiere Pro After Effects போன்ற முன்னணி டிசைனிங் சாப்ட்வேர்கள் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும். கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் புதுமையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த பயிற்சி திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் கண்ணோக்குப் புனைவு (Visual Storytelling), பிராண்டிங் மற்றும் மல்டிமீடியா எடிட்டிங் போன்ற முக்கியமான செயல்பாடுகளில் நேரடி பயிற்சி வழங்கப்படும்.

கிராஃபிக் டிசைனிங் மற்றும் வீடியோ எடிட்டிங் பற்றிய அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சி வழங்கும் இந்த திட்டத்தில் பயிற்சியை முடித்த பங்கேற்பாளர்களுக்கு அரசு அங்கீகரித்த சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் இந்த பயிற்சி 30 நாட்கள் நடைபெறும். 

இதற்கான முன்பதிவுக்கு - https://shorturl.at/L293d மேலும் தகவல்களுக்கு அழைக்கவும் - 63858 37858